2010ம் ஆண்டு வெளியான பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. அதன்பின்னர் மாஸ்கோவின் காவிரி, நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, தெரி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். மேலும் தெலுங்கிலும் பல படங்கள் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி தென்னிந்திய திரையுலகை கவர்ந்தார். சில தினங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சமந்தா சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்த நோய் குணமாக சிறிது காலம் ஆகும் என்றும் தெரிவித்து இருந்தார். இது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமந்தா விரைவில் குணமடைய வாழ்த்தினர். சிகிச்சை பெற்று வந்ததால் சில மாதங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த சமந்தா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். சமந்தா நடிப்பில் சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் 5 மொழிகளில் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்துவந்த ‘குஷி’ படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் சமந்தாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார். கையில் காயங்களுடன் இருக்கும் சமந்தாவின் புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு