மாநகரில் பதிவு எண்கள் இல்லாமல் சட்டவிரோதமாக ஓடுகின்ற வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டுமென சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் அவர்களிடம் ஈ.பி.அ.சரவணன் நேரில் மனு.போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் போதும், விபத்துகள் ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்லும் சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவு எண்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.இதனால் அரசு உத்தரவுப்படி வாகன பதிவு எண்கள் மற்றும் வாகன பதிவு எண் தகடுகள் இல்லாத வாகனங்கள் மீது வழக்கு பதிந்து பறிமுதல் செய்வதை உறுதிசெய்ய வேண்டும்.திருப்பூர் மாநகர பகுதியிலுள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள சாலைகளில் ஓடுகின்ற நம்பர் பிளேட் இல்லாமல் 2 சக்கரம், 4 சக்கரம் உள்ளிட்ட பல லட்சக்கணக்கான வாகனங்கள் தொடர்ச்சியாக ஓடுகின்றதால் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதால் நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களை முற்றிலுமாக பறிமுதல் செய்து பொது மக்களுக்களுடைய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுவது சம்பந்தமாக திருப்பூர் அவிநாசி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகர காவல் ஆணைரகம் அலுவலகத்தில் மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு வடக்கு காவல் துணை ஆணையாளர் அவர்களிடம் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச கூட்டமைப்பு மாநில இணை பொது செயலாளரும் சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ.சரவணன் நேரில் மனு அளித்து கோரிக்கை வைத்துள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது… நம்பர் பிளேட் இல்லாமல் ஓட்டுவது கடுமையான குற்றமாகும், இது மிகப்பெரிய தண்டனைக்கு வழிவகுக்கும். நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டினால், வாகனங்கள் அடையாளம் காணப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென ஏற்கெனவே எங்களுடைய சங்கம் சார்பாக புகார் அளித்த நிலையில் சம்பந்தப்பட்ட திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் நிலைய அலுவலர் அனுப்பியுள்ள கடிதத்தில் திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் நம்பர் பிளேட் இல்லாமல் இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளதால், பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும், உடனடியாக திருப்பூர் மாவட்ட மாநகரப் பகுதியில் உள்ள ஓடுகின்ற பதிவு எண் இல்லாத அனைத்து வாகனங்களும் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், சிலர் சந்தர்ப்பங்களில் நம்பர் பிளேட் இல்லாமல், வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றாலும், குற்ற செயல்களில் இருந்து ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க இயலவில்லை என குறிப்பிட்டுள்ளார்.ஆனால் தொடர்ச்சியாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள இடங்களில் நம்பர் பிளேட் இல்லாத அதிகவேக வாகனங்கள் ஓடுகின்றது. உதாரணமாக 27-12-2024 ம் தேதி திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள PN.ரோடு போயம்பாளையம் நால்ரோடு கிழக்கு அபிராமி தியேட்டர் சாலையிலுள்ள வடிவேல் நகர் நோக்கி சென்ற இருசக்கர வாகன ஓட்டி மீது அந்த வழியாக வந்த நம்பர் பிளேட் இல்லாத அதிகவேக கார் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இது தொடர்பான சி சி டி வி காட்சி வெளியாகியுள்ளது. குறிப்பாக பதிவு எண் நம்பர் பிளேட் இல்லாமல் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றதை முற்றிலுமாக தடை செய்து கட்டாயமாக பதிவு எண்ணுடன் நம்பர் பிளேட் பொருத்திய பிறகே வாகனங்கள் சாலை ஓடுகின்றதை உறுதிசெய்ய வேண்டும்.எனவே, பொது நலன் கருதி திருப்பூர் மாநகர பகுதியிலுள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள சாலைகளில் ஓடுகின்ற அதிகவேக நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களை உடனடியாக தொடர் சோதனை நடத்தி வழக்கு பதிவும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் , போக்குவரத்து துறையும் இணைந்து விதிகளைமீறி விதவிதமான நம்பர் பிளேட்டுகளுடனும், பல இடங்களில் பதிவு எண்கள் நம்பர் பிளேட் இல்லாமலும் வலம் வருகின்ற அனைத்து வாகனங்களை உடனடியாக கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச கூட்டமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது