தமிழகத்தின் தலைசிறந்த ஊடகமான தமிழக குரல்-தொலைக்காட்சி-பத்திரிக்கை நிறுவனத்தின் ஆண்டு விழா நிகழ்வு கோவை பிச்சனூர் தானிஷ் அஹமத் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இவ்விழாவில் 2024-ம் ஆண்டில் தமிழகத்தில் சமூக சேவையில் தலைசிறந்து விளங்கி வரும் சமூக பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவில் கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை செய்து வரும் தொடர் சமுதாய பணிகளையும்-முதியோர் நலன் காக்கும் பணிகளையும் பாராட்டி அங்கீகாரம் வழங்கும் விதமாக அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் M.கெளரி சங்கர் அவர்களுக்கு தமிழகத்தின் தன்னிகரில்லா தன்னார்வலர் விருது -2024 எனும் உயரிய விருதை வழங்கி பெருமிதப்படுத்தினார்கள்.இவ்விருதை தமிழகுரல் நிறுவனர் வினோத் குமார் ,சமூக சேவகர் சசிகுமார் , கல்லூரி முதல்வர் Dr.K.G பார்த்தீபன் , ஆசிரியர் பெருமக்கள் உள்ளிட்டோர் வழங்கி சிறப்பித்தார்கள்.இந்த நல்வாய்ப்பை வழங்கி உதவிய தமிழக குரல் செய்தி நிறுவன நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாரத மாதாவின் நெஞ்சார்ந்த நன்றி மலர்களை தெரிவித்துக்கொள்கின்றோம்

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு