புலனம் ஆண்ட்ராய்டு டேப்லெட் வெர்ஷனில் சைட்-பை-சைட் பெயரில் புதிய அம்சம் உருவாக்கப்பட்டுகிறது. இந்த அம்சம் ஏற்கனவே உள்ள சாட்களை திரையின் ஒருபகுதியில் வைத்துக் கொண்டு மேலும் அதிக சாட்களுக்கு பதில் அனுப்பவும், சாட் செய்யவும் உதவும். இதன் மூலம் ஆண்ட்ராய்டு டேப்லெட் ஸ்கிரீனில் பல்வேறு சாட்களை ஒரே சமயத்தில் பயன்படுத்தலாம். புதிய அம்சம் ஸ்கிரீனை பிரித்து, பல்வேறு உரையாடல்களை ஒரே சமயத்தில் பயன்படுத்த வழி செய்யும். ஒரே சமயம் பலருக்கு குறுந்தகவல் அனுப்பும் வழக்கம் கொண்டிருப்போருக்கு இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த அம்சம் வேண்டாம் என்பவர்கள் அதனை டிசேபில் (செயலிழக்க) செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்ய வாட்ஸ்அப் செட்டிங்ஸ் — சாட்ஸ் ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும். இந்த அம்சம் உலகளவில் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.