ராணிப்பேட்டை மாவட்டம்
கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் crpf அதிகாரிகள் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட
எஸ்யுவி வாகனத்தை ஒரு தற்கொலை குண்டுதாரி மோதியதில் வாகனம் வெடித்து சிதறி 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர் இந்திய பாதுகாப்பு படையின் மீது நடத்தப்பட்ட இந்த மிக கொடூரமான தாக்குதல்
நாட்டையே அதிர்ச்சடைய செய்தது
இந்த வீரர்களின் தியாகத்தையும் அர்ப்பணைப்பையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி இந்த தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர்அந்த வகையில்
ஆற்காடு நகர பிஜேபி இளைஞர் அணி சார்பில் புல்வாமா தாக்குதல் ஆறாவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
இந்நிகழ்ச்சிற்க்கு ஆற்காடு நகர இளைஞரணி தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார் நகர தலைவர் பாஸ்கர், இளைஞரணி மாவட்ட தலைவர் முத்தரசு மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அஜித்,
ஏஎஸ். ராஜசேகர் மாநில செயற்குழு உறுப்பினர் ஜிவி. பிரகாஷ்,
ஜி.தணிகாசலம்,ஏவி வரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்டத் தலைவர் நெமிலிபி.ஆனந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பு படை வீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார் அதனைத் தொடர்ந்து நகர பொதுச் செயலாளர் சுனில் குமார்,சரவணன்,
கமலக்கண்ணன், சிவராமகார்த்திக்,
ஆர். தாகூர்சுந்தர், நாவலன் உள்ளிட்ட ஏராளமான பிஜேபி பொறுப்பாளர்கள் வீரவணக்கம் செய்து மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு