நாளை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கனை வீடு வீடாகச் சென்று தரவிருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது.வீடு வீடாகப் போவது சாத்தியமென்றால் பரிசுத் தொகுப்பையே நேரடியாக வீட்டில் தந்துவிடலாமே? ஒரு கடைக்கு ஆயிரம் கார்டுகள் என்றால் கூட இது சாத்தியம் தானே…தேவைப்பட்டால் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை ஊழியர்களையும்கூட இதற்குப் பயன்படுத்தலாம். நேரம் செலவு செய்து வரிசையில் நிற்காமல் வீட்டுக்கே அரசின் பரிசு வந்துசேரும்போது நிச்சயம் அரசின் மீது பெரிய மரியாதை உருவாகும்.தொழில்நுட்ப உபகரணங்களை தெருத்தெருவாக எடுத்து வருவது சிரமம் என்று ரேஷன் கடை நண்பர்கள் சொல்கிறார்கள். இந்தக் காலத்தில் இது அர்த்தமற்ற காரணம். மொபைல் செயலிகள் வழி தினமும் பல ஆயிரம் கோடி வணிகம் நடக்கும் நாடு இது. முக்கியமான இடத்தில் இருக்கும் நண்பர்கள் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு