சென்னை:
பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுரை வழ்ங்கியுள்ளார். இது தொடர்பாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோக பதிவில், “என்பேரன்புமிக்க 10ம் வகுப்பு 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கின்ற மாணவ, மாணவிகளே, பரிட்சை டென்சனில் உள்ளீர்களா? ஒரு டென்சனும் வேண்டாம். எந்த பயமும் வேண்டாம்.நீங்கள் படித்த புத்தகத்தில் இருந்துதான் கேள்விகள் வரப்போகிறது. அதனால் உறுதியுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையானதெல்லாம் தன்னம்பிக்கையும், மனஉறுதியும்தான். அது இருந்தாலே நீங்கள் பாதி ஜெயித்துவிட்டீர்கள். தேர்வு என்பது உங்களை பரிசோதிப்பதற்கு அல்ல. உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்வது. உயர்த்தி விடுவது. அதனால எந்தவித தயக்கமும் இல்லாமல் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள். பாடங்களை ஆழ்ந்து புரிந்து படியுங்கள். விடைகளை தெளிவாக முழுமையாக எழுதுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். அந்த வெற்றிக்காக உங்கள் பெற்றோர், ஆசிரியரைப்போல் நானும் காத்திருக்கிறேன். முதல்வராக மட்டும் இன்றி உங்கள் குடும்பத்தல் ஒருவதாக வாழ்த்துகிறேன். ஆல் தி பெஸ்ட்”. இவ்வாறு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை மாணவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு