மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் வசூல் குறித்த புதிய தகவலை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் ‘பொன்னியின் செல்வன் 2’. இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. இந்தப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு ரிலீசான நிலையில் சமீபத்தில் இரண்டாம் பாகம் வெளியானது. இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன் 2’ பட வசூல் குறித்து லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி ‘பொன்னியின் செல்வன் 2’ படம் திரையரங்களில் வெளியானது. கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இதன் முதல் பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. இதனால் வசூலிலும் இந்தப்படம் மாஸ் காட்டியது. இதனையடுத்து அண்மையில் வெளியான இதன் இரண்டாம் பாகம், பார்ட் 1 அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை.
தமிழ் வாசகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நாவல் ‘பொன்னியின் செல்வன்’. கல்கி எழுதிய நூலை படமாக்க திரையுலகை சார்ந்த பல பிரபலங்கள் விரும்பினார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் பலரும் கண்ட இந்த கனவை மணிரத்னம் நனவாக்கியுள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அதே பெயரில் இரண்டு பாகங்களாக படமாக்கியுள்ளார் மணிரத்னம்.
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப்படத்தை இரண்டு பாகங்களாக தயாரித்தன. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா லட்சுமி, ரகுமா, கிஷோர், லால் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே இந்தப்படத்தில் நடித்தனர் இந்நிலையில் கடந்த மாதம் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. அதன்படி கடந்த 2023 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்த போஸ்டருடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.