போரூர் அடுத்த காரம்பாக்கம், பொன்னியம்மன் நகர் பகுதியில் ஜெயின் கோயில் செயல்பட்டு வருகிறது. இந்த ஜெயின் கோயிலில் நேற்று வழக்கம் போல் பூஜைகள் முடித்து கோவில் வளாகத்தை பூட்டிவிட்டு சென்றனர்.இந்த நிலையில் வழக்கம்போல் காலை கோவில் நடையை திறந்த போது ஜெயின் கோவிலின் சிலையின் நெத்தியில் பதிக்கப்பட்டிருந்த 20 பவுன் நெத்தி சுட்டி நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கோவில் நிர்வாகி சஞ்சய் மேத்தாவளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வளசரவாக்கம் உதவி கமிஷனர் செம்பேடு பாபு தலைமையில் விரைந்து சென்ற போலீசார் ஜெயின் கோவில் வளாகம் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வெளி ஆட்கள் யாரும் உள்ளே சென்று நகைகளை எடுப்பதற்கான காட்சிப்பதிவுகள் ஏதும் இல்லை எனவும் அது மட்டுமின்றி ஜெயின் கோவிலில் உள்ள சிலையின் நெற்றியில் பதிக்கப்பட்டு இருந்த தங்கத்தை அவ்வளவு எளிதாக எடுக்க முடியாது எனவும் எனவே கோவில் உள்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மர்ம நபர்கள் யாராவது திருடினார்களா..! அல்லது கோவில் வளாகத்திலேயே பணிபுரிபவர்கள் நகையை திருடினார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலத்த பாதுகாப்புடன் செயல்பட்டு வந்த ஜெயின் கோவில் வளாகத்தில் உள்ள சிலையின் நெற்றியில் இருந்த 20 பவுன் நகைகள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு