குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாள் அன்று நடைமுறைக்கு வர உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு வீடு வீடாக கொடுக்கும் பணி கடந்த 20-ந்தேதி முதல் நடைபெற்று வந்தது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறுவதற்கான முகாம்கள் இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளன. இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை பதிவு செய்யும் முகாம்களில் சர்வர் முடங்கியதால் கடலூர் மாவட்டம் முழுவதும் விண்ணப்பம் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. கைரேகை வைத்து பதிவு செய்யும் முறை முற்றிலும் இயங்கவில்லை. சாதாரணமாக பதிவு செய்வதால் ஒவ்வொரு நபருக்கும் அரை மணி நேரம் வரை ஆனது. இதனால் பெண்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு