மக்களவை தேர்தல் வரும்த 19ந்தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதையொட்டி, அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகின்றன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடுகிறது. சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர்.
இதையடுத்து, மக்களவை தேர்தலுக்கான விசிக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். ஜெயங்கொண்டபுரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதை திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார். இந்த தேர்தல் அறிக்கையில் பல்வெறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
- அம்பேத்கர் பிறந்தநாளை அறிவு திருநாளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
- தமிழ்நாட்டில் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருக்கக்கூடாது என வலியுறுத்தப்படும்
- ஆளுநர் பதவியை நீக்க மத்திய அரசுக்கு விசிக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
- ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை அமல்படுத்தும் திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம்
- மின்னணு வாக்கு இயந்திரத்திற்கு பதிலாக, வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த தொடர்ந்து வலியுறுத்தப்படும்
- பாசிச சக்திகளை அகற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் விசிக மேற்கொள்ளும்
- புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தர விசிக –வின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்
- தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டம் ரத்து செய்ய வலியுறுத்தப்படும்
- தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களின் பாதுகாப்பு உறுதி செய்ய விசிக குரல் கொடுக்கும்
- இந்தி திணிப்பை எதிர்ப்பு அனைத்து மொழிகளின் பாதிகாப்பினை காக்க விசிக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும்
- தேசிய மனித உழைப்பு நேரம் மற்றும் மதிப்புக்கொள்கை குறித்து வலியுறுத்தப்படும்
- வறுமைக்கோட்டு உச்ச வரம்பினை உயர்த்த விசிக தரப்பில் வலியுறுத்தப்படும்
- ஜிஎஸ்டி வரிவிதிப்பை ரத்து செய்ய வலியுறுத்தப்படும்
- விவசாய கடன் ரத்து செய்ய குரல் கொடுக்கும்
- கார்ப்பரேட் மற்றும் தனியார்மயத்தை கைவிட தொடர்ந்து வலியுறுத்தப்படும்
- சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும்
- மனித கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றும் முறையை ரத்து செய்ய வலியுறுத்தப்படும்
- சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் தொடர்பாக குரல் கொடுக்கும் விசிக
- மாநில அரசுகளின் வாயிலாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நியமனம் செய்ய வலியுறுத்தல்
- மத்திய அரசின் தமிழ்நாட்டுப் பணிகளில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே நியமனம்
- இந்தியாவின் இரண்டாவது தலைநகராக சென்னை அமைக்க வலியுறுத்தப்படும்
- அமைச்சரவையிலும், மேலவையிலும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்
- ஆணவக்கொலை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர குரல் கொடுக்கும்
- பட்டியலின கிறுத்துவர்களை அட்டவணைச் சாதிகள் பட்டியலில் இணைக்க வலியுறுத்தல்
- பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அமலுக்கு கொண்டு வர வலியுறுத்தல்
- இந்துத்துவ சக்தியால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க தேவையான முயற்சிகளை வி.சி.க மேற்கொள்ளும்.
- காஷ்மீர் பிரச்சனை அடிப்படையில் இந்திய அரசின் வெளியுறவு கொள்கை தீர்மானிக்கப்படக்கூடாது என்பதில் வி.சி.க. உறுதியாக உள்ளது.
- ராமர் கோயில் கட்டுமானத்தில் நடந்த ஊழல் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த விசிக வலியுறுத்தும்.
- தமிழ்நாட்டின் நலனை கருத்தில் கொண்டு இலங்கை பிரச்சனையில் முடிவுவெடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை விசிக வலியுறுத்தும்.
- கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்க நாடாளுமன்றத்தில் விசிக பாடுபடும்.
- ஒன்றிய மற்றும் மாநில அளவில் பொது லோக்பால் அமைப்புகளை உருவாக்க வேண்டும்.
- பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் அதற்கான கண்காணிப்புக்குழுவையும் உருவாக்க வேண்டும்.
- வகுப்புவாத பிரிவினையை தூண்டும் சட்ட திருத்தங்களை நீக்க விசிக வலியுறுத்தும்.
- சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. சட்ட திருத்தங்கள் முற்றிலும் நீக்கப்பட வேண்டும்.
- ராமர் கோயில் திறப்பு விழா நடந்துள்ள நிலையில் நீதிமன்ற ஆணைப்படி மசூதிக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை அவசியம்.
- 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாளாக உயர்த்தவும், நகர்ப்புறங்களுக்கு விரிவுபடுத்த கோரிக்கை.
- மாநிலங்களுக்கான உரிய நிதிப்பகிர்வு
- அனைத்து மொழிகளிலும் அம்பேத்கர் நூல்கள்
- தொகுதிமறுசீரமைப்பில் தென்னிந்திய மாநிலங்களுக்கு பாதுகாப்பு
- தேவையற்ற தேர்தல் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்
- இந்தி எதிர்ப்பு
- இந்திய மொழிகள் பல அமைச்சகம்
- தேசிய இனங்கள் கவுன்சில்
- இந்திய மொழிகள் வளர்ச்சி ஆணையம்
- இந்தியா முழுவதும் தமிழ்ச் செம்மொழி வாரக் கொண்டாட்டம்
- வறுமைக் கோட்டின் உச்சவரம்பினை உயர்த்துதல்
- விவசாயம் மற்றும் நிலச்சீர்த்திருத்தம்
- விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம்
- வருமான வரி சீரமைப்பு
- பெட்ரோலியப் பொருட்களின் மீது அரசின் விலைக் கட்டுப்பாடு
- ராணுவத்தின் நிதியைக் குறைத்து கல்விக்கான நிதியை அதிகரிப்பு
- தனியார்மயதலை கைவிடல்
- நீதித்துறையில் இட ஒதுக்கீடு
- தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு
- சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு
- உயர்சாதி இட ஒதுக்கீடு ரத்து
- அனைவருக்கும் வீடு அடிப்படை உரிமை* மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையே ஒழித்தல்* இடுகாடு பணியில் இருந்து தலித்துகளை விடுவித்தல்* மாநில சுயாட்சி* சென்னையில் உச்சநீதிமன்ற கிளை* மாநில அரசுகளின் வழியே உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்* வழக்காடு மொழியாக தமிழ்* தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்குதல்* தமிழ்நாட்டிற்கென தனிக் கொடி* கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல்* கோதவரி- காவிரி இணைப்புத் திட்டம்* அணுமின் நிலையங்களை மூடுதல்* வேலி காத்தான் ஒழிப்பு* இந்தியாவின் இரண்டாவது தலைநகராக அறிவித்தல்* தமிழ்நாட்டின் பொருளாதார தலைநகராக தூத்துக்குடி* இட ஒதுக்கீடு பாதுகாப்பு* அமைச்சரவையிலும் மேலவைகளிலும் இட ஒதுக்கீடு* பழங்குடியினருக்கு தனிப்பட்டா* தலித் கிருத்தவர்களை பட்டியலில் இணைத்தல்* பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு* மீனவர்களுக்கு தனி அமைச்சகம்* மதச் சிறுபான்மையினருக்கு தனி அமைச்சகம்* மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பிரதிநிதித்துவம்உள்பட ஏராளமான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.