சென்னை:
சென்னை புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 37). டிரைவர். இவருடைய மனைவி கோமதி (35). இருவருக்கும் திருமணமாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை. பிரேம்குமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பிரேம்குமார் மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். பொருமையை இழந்த கோமதி புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பிரேம்குமார் அழைத்து விசாரணை செய்தபோது இருவரும் சமரசமாக போவதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் பிரேம்குமாரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
ஆனால் வீட்டிற்கு சென்ற பிரேம்குமார், கோமதியிடம் சண்டை போட்டு கன்னத்தில் அடித்து கிழே தள்ளியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கோமதி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து மயங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பிரேம்குமார் வீட்டில் இருந்து தப்பியோடியுள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த கோமதியின் தாயார், மகளை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அங்கு கோமதியை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மூளையில் ரத்தம் கட்டியுள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்யவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து கோமதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் கெலை வழக்காக பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு