அச்சரப்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆகியோரின் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி சார்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் மிகவும் எழுட்சியாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கொள்கைபரப்பு துணை செயலாளர் விந்தியா கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தமங்கலம் சுப்ரமணியன், அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் விவேகானந்தன், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் அப்பாதுரை, மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கீதா கார்த்திகேயன், அச்சரப்பாக்கம் பேரூராட்சி செயலாளர் முருகதாஸ், மதுராந்தகம் நகரச் செயலாளர் ரவி மற்றும் அதிமுக செயலாளர்கள், நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு