மத்திய அரசில் 5,369 காலிப்பணியிடங்கள்: 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

புதுடெல்லி:
மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
இதற்கான விண்ணப்ப செயல்முறை வரும் 27ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் கடைசி நேரம் வரை காலம் தாழ்த்தாமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலி பணியிடங்கள்:

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் அமைப்புகளில் உள்ள 549 வகைமைகளின் கீழ் 5,369 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், கிட்டத்தட்ட 100 வகைமைகள் பட்டப்படிப்பு நிலையிலும், 169 வகைமைகள் மேல்நிலைப்பள்ளி நிலையிலும், 280 வகைமைகள் மெட்ரிக் பள்ளி நிலையிலும் நிரப்பப்பட உள்ளன. இணையவழியில் விண்ணப்பபங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 27.03.2023. இணைய வழியில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள் 28.03.2023. கணினி வழித் தேர்வு ஜூன்- ஜுலை 2023.
இதற்கான விண்ணப்ப செயல்முறை கடந்த 6ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இம்மாதம் 27ம் தேதி நள்ளிரவு 11 மணி வரை இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க முடியும். ssc.nic.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள், எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, ஒவ்வொரு பதவிக்கும் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடையவராவர்.

கணினி அடிப்படையில் நடைபெறும் தேர்வின் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். தெற்கு மண்டலத்தில் கணினி மூலம் நடத்தப்படும் இந்த தேர்வு 2023 ஜுன் – ஜுலை மாதங்களில், 22 மையங்களில் / நகரங்களில் நடைபெறுகிறது. அதாவது ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 11 மையங்ளிலும், புதுச்சேரியில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 8 இடங்களிலும், தெலங்கானாவில் 3 மையங்களிலும் நடைபெறுகின்றன.
பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பம் செய்வது எப்படி ஆகியவற்றை ஷிஷிசி விளம்பர அறிக்கையில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய