உலகளவில் மருத்துவ தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது நோய் வருவதற்கு முன்பே அதை பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ள ஒரு பரிசோதனை உள்ளது. இந்த சோதனையில் ரிலையன்ஸ் நிறுவனம் இறங்கியுள்ளது.
ஆசியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி இந்த மருத்து பரிசோதனை திட்டத்தை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளார்.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கைப்பற்றிய ஸ்டாண்ட் லைப் சயின்ஸ் நிறுவனம் வாயிலாக இந்தியாவில் புதிய ஜினோம் சீக்வென்ஸ் டெஸ்ட்டிங் சேவை அறிமுகம் செய்ய உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் ஜெனடிக் மாபிங் துறையில் இறங்க உள்ளது, வேகமாக வளர்ந்து வரும் இந்திய ஹெல்த்கேர் சேவை சந்தையில் அடுத்த சில வாரத்தில் 12,000 ரூபாய் விலையில் ஜினோம் சீக்வென்ஸ் டெஸ்ட்டிங் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது என இப்புதிய டெஸ்டிங்ஜை உருவாக்கிய ஸ்டாண்டர்டு லைப் சயின்ஸ் நிறுவனத்தின் சிஇஓவான ரமேஷ் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
ஆசியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி 2021 ஆம் ஆண்டில் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஹெல்த் கேர் நிறுவனமான ஸ்டாண்டர்டு லைப் சயின்ஸ் நிறுவனத்தின் 80 சதவீத பங்குகளை கைப்பற்றியது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் கட்டுப்பாடு முழுமையாக ரிலையன்ஸ் கையில் உள்ளது.
ஜினோம் சீக்வென்ஸ் டெஸ்ட்டிங் சேவை இந்தியாவில் தற்போது கிடைக்கும் பிற சேவைகளை காட்டிலும் 86 சதவீதம் குறைவான விலை கொண்டது.
ஜினோம் சீக்வென்ஸ் டெஸ்ட்டிங் அல்லது முழு மரபணு வரிசைமுறை சோதனை என்பது ஒரு மரபணுவில் கிட்டத்தட்ட அனைத்து டிஎன்ஏ மாறுபாடுகளையும் கண்டறியும் திறன் கொண்ட ஒரு விரிவான சோதனை ஆகும். இந்த ஜினோம் சீக்வென்ஸ் டெஸ்ட்டிங் மூலம் ஒருவரின் மரபணுவில் 6000க்கும் அதிகமான உடல் உபாதகளை வர வாய்ப்பு உள்ளதா என்பதை கண்டறிய முடியும்.
மரபணு சோதனையின் வெளிப்படையான நன்மை என்னவென்றால் புற்றுநோய் போன்ற குறிப்பிட்ட நோய் தாக்குதல் குறித்த ஒருவருக்கான ஆபத்து அளவுகள் நன்கு புரிந்துகொள்வதற்கான வாய்ப்பாகும். இந்த சோதனை 100 சதவீதம் சரியான தீர்வுகளை தரவில்லை என்றாலும் பெரும்பாலான உடல்நலம் குறித்து முடிவுகளை எடுக்க இது கட்டாயம் உதவும்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு