கொடைக்கானல்:
கொடைக்கானலில் மலைப் பூண்டு அறுவடை தொடங்கியுள்ளது. ஒரு கிலோ பூண்டு ரூ.350 வரை விற்பனையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கவுஞ்சி, பூம்பாறை, கூக்கால், பழம்புத்தூர், கிளாவரை உள்ளிட்ட பகுதிகளில் 900 எக்டேரில் மலைப்பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மலைப்பூண்டு பாரம்பரிய வகை மற்றும் அதிக மருத்துவ தன்மை கொண்டது. அதனால் கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் பூண்டு சாம்பல் நிறத்தில் காணப்படும். காரத்தன்மையும் அதிகம். பயிரிட்ட 120 நாட்களில் மலைப் பூண்டு அறுவடைக்கு வரும். புகை மூட்டம் செய்து பதப்படுத்தி வைத்தால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட மலைப்பூண்டுகள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கான பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது ஒரு கிலோ பச்சை பூண்டு (அறுவடை செய்த) ரூ.70-க்கும், புகை மூட்டம் செய்யப்பட்ட பூண்டு ஒரு கிலோ ரூ.280 முதல் ரூ.350 வரை விற்பனையாகிறது. விளைச்சல் குறைந்தாலும், போதிய விலை கிடைப்பதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு