அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இன்று கோவையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுப்டடனர். மறியல் போராட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் தலைமை தாங்கினார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விலைவாசி உயர்வை கண்டித்தும், அதிகரித்து வரும் வேலையின்மையை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கியது. இதனையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பெண்கள் உட்பட 305 பேரை கைது செய்தனர். இதேபோல் கோவையில் சரவணம்பட்டி, மேட்டுப்பாளையம் ரோடு பி.எஸ்.என்.எல் அலுவலகம் உட்பட 9 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். பெரியநாயக்கன் பாளையத்தில் பி.ஆர்.நடராஜன் எம்.பி. தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. அங்கு 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு