இருபக்க முலைக்காம்புகளை பாதுகாக்கும் வெற்றிகரமான ரோபோட்டிக் அறுவைசிகிச்சை தெற்காசியாவில் முதன்முறையாக சாதனை
- மிக நவீன டா வின்சி X-ல் அதிக துல்லியத்திறனுடன் செய்யப்பட்ட ரோபோட்டிக் மார்பக அறுவைசிகிச்சை.
- மார்பகத்தின் வடிவையும் வளைவையும் தக்கவைக்க உதவுகிறது.
- முலைக்காம்பின் உணர்வை பாதுகாப்பாசு தக்கவைப்பதில் மேம்பாடு.
- புற்றியல் ரீதியில் பாதுகாப்பாக இயல்புவாழ்க்கைக்கு வேகமாக திரும்ப உதவுகிறது.
சென்னை 2024, மார்ச் 26 – உடல்நல சிகிச்சையில் உயர்நேர்த்தியான சேவை மீது தனது அர்ப்பணிப்புக்காக உலகளவில் புகழ்பெற்றிருக்கும் அப்போலோ கேன்சர் சென்டர் சென்னை (ACC) மார்பக புற்றை நீக்கும் சிகிச்சையில் ரோபோ உதவியுடன் மறுகட்டமைப்பை முலைக்காம்பை தக்கவைத்து அகற்றாமல் மேற்கொள்ளும் தெற்காசியாவின் முதல் உடனடியாக சிகிச்சை செயல்முறையை வெற்றிகரமாக செய்திருக்கிறது மார்பக அறுவைசிகிச்சையில் புதிய பாதை படைக்கும் சாதனை என்றே இதனை கூறலாம் மறைவாக உள்ள மிகச்சிறிய கீறல்கள் வழியாக முலைக்காம்பை தக்கவைக்கும் அதே நேரத்தில் ஒட்டுமொத்த மார்பகத்தையும் அறுவைசிகிச்சை நிபுணர்களால் அகற்றுவது இதனால் சாத்தியமாகியிருக்கிறது நோயாளிக்கு அழகியல் ரீதியில் சிறப்பான விளைவுகள் கிடைப்பதை இந்த ரோபோட்டிக் சிகிச்சை ஏதுவாக்கியிருக்கிறது.
டாக்டர P. வெங்கட் மற்றும் டாக்டர் பிரியா கபூர் ஆகியோர் தலைமையிலான ரோபோட்டிக் புற்றுநோயியல் அறுவைசிகிச்சை நிபுணர்களது குழுவால் மேற்கொள்ளப்பட்ட இந்த புதுமையான செயல்முறை. மார்பக புற்றுநோய் அறுவைசிகிச்சை பிரிவில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படுகிறது.
தொடக்கநிலை மார்பக புற்றுநோய் மற்றும் ஒரு BRCA1 பிறழ்வு பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட அசாமைச் சேர்ந்த 37 வயதான பெண்ணுக்கு இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது அவரது பாதிப்பு நிலையின் காரணமாக முற்காப்பு முறையில் அவரது இரு கருவகங்களையும் அகற்றுவதுடன் சேர்த்து இருபக்க மார்பக நீக்க சிகிச்சையும் அவசியமாக இருந்தது.
அப்பெண்ணின் வயதையும் மற்றும் அவரது மார்பகங்களின் இயற்கையான தோற்றத்தை தக்கவைப்பதின் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு முலைக்காம்பை அகற்றாமல் தக்கவைக்கும்” மார்பக மார்பக நீக்க சிகிச்சை அணுகுமுறை மருத்துவர்கள் குழுவால் தேர்வுசெய்யப்பட்டது பெண்களுக்கு ஒரு அத்தியாவசிய குறியீடாக இருக்கும் இதனை அகற்றாமல் தக்கவைப்பதன் மூலம் நோயாளியின் வாழ்க்கைத்தரத்தின் மீது ஏற்படும் பாதிப்பை குறைப்பதே இந்த உத்தியின் நோக்கமாகும் அத்துடன் அறுவைசிகிச்சைக்குப்பிறகு அதிக நேர்மறையுடனான அனுபவத்தை நோயாளிக்கு உறுதிசெய்வதும் இதன் இலக்காகும்.
இந்த அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செயல்படுத்த குறிப்பிட்ட சிகிச்சை நெறிமுறைகளை அறுவைசிகிச்சை நிபுணர்கள் பின்பற்றினர் புற்றுக்கட்டியை அகற்றுவதற்கு முன்பு ஹீமோதெரபி தரப்படும் சிகிச்சை இப்பெண்ணுக்கு வழங்கப்பட்டது அதைத்தொடர்ந்து முற்காப்பு செயல்பாடாக கருவகங்களையும் மற்றும் இருபக்க மார்பகங்களையும் அகற்றும் சிகிச்சையை மேற்கொள்ள நோயாளி சம்மதித்தார் முற்காப்பு அடிப்படையில் இடரை குறைக்கும் கருவக நீக்க சிகிச்சையுடன் மார்பகத்தின் முலைக்காம்பை நீக்காமல் மார்பகத்தை மட்டும் அகற்றும் சிகிச்சையானது செய்யப்பட்டது மிகச்சிறிய கீறல்களை கொண்டு மேற்கொள்ளப்பட்ட இச்செயல்முறையில் ரோபோட்டிக் சிகிச்சையின் சாதகங்கள் சிறப்பாக பயன்படுத்தப்பட்டன இரு உதிப்தி பருவா (வேண்டுகோளின்பேரில் பெயர் மாற்றப்பட்டுள்ளது)இச்சிகிச்சை குறித்து கூறியதாவது. வாழ்க்கையையே மாற்றியமைக்கும் இந்த மருத்துவ செயல்முறைக்குப் பிறகு ஒரு மாதத்திற்குள் எனது வழக்கமான செயல்பாடுகளை மீண்டும் மேற்கொள்வதற்கு அப்போலோ கேன்சர் சென்டரின் மருத்துவர்களின் திறன்மிக்க சிகிச்சை முறை உதவியிருக்கிறது மார்பக புற்றுநோயை வெற்றிகொள்ளும் அதே நேரத்தில் எனது இயற்கையான தோற்றத்தை தக்கவைப்பதன் மூலம் கண்ணியத்தோடு எனது வாழ்க்கையை திரும்பப் பெறுவதற்கு டாக்டர் வெங்கட் மற்றும் அவரது குழுவினர்கள் எனக்கு உதவியிருக்கின்றனர் இன்றைக்கு புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையோடு, முன்பைவிட இன்னும் வலுவான நபராக நான் எனது வாழ்க்கையை தொடங்கியிருக்கிறேன்.
இந்தியாவில் ரோபோட்டிக் உதவியுடனான மார்பக அறுவைசிகிச்சையின் எதிர்காலம் குறித்து தனது வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்திய ACC சென்னையின் புற்றுநோயியல் அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் P. வெங்கட் நோயாளியின் இயற்கையான மார்பக அமைப்பை P தக்கவைக்க வேண்டுமென்ற உறுதியான குறிக்கோள்களின் அடிப்படையில் இடர்வாய்ப்பை குறைப்பதற்காக ஒரு முற்காப்பு நடவடிக்கையாக கருவகங்களை அகற்றும் செயல்முறையுடன் ரோபோட்டிக் உதவியுடன் இருபக்க மார்பக நீக்கம் என்ற புரட்சிகரமான அணுகுமுறையை நாங்கள் இதில் மேற்கொண்டோம். இந்த நவீன ரோபோ உதவியுடனான உத்தி மிகச்சிறப்பான பார்வைத்திறனை வழங்குவதுடன் குறைவான இரத்த இழப்பு மேம்படுத்தப்பட்ட பணிச்சூழலியையும் மற்றும் மிகச்சிறப்பான அழகியல் விளைவுகளையும் சாத்தியமாக்குகிறது இந்நோயாளி விரைவாகவும் வெற்றிகரமாகவும் இயல்புநிலைக்கு திரும்பியது இந்த அறுவைசிகிச்சை செயல்முறையிலிருந்து 24 மணிநேரத்திற்குள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு வழிவகுத்தது.
ACC சென்னையின் புற்றுநோயியல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர பிரியா கபூர் பேசுகையில் மிகச்சிறிய கீறல்கள் வழியாக ஒட்டுமொத்த மார்பகக் கட்டியையும் இந்த செயல்முறை அகற்றுவதோடு மார்பகத்தின் தோலிலும் மற்றும் முலைக்காம்பிலும் உணர்வினை தக்கவைத்துக்கொள்ளும் சாத்தியத்தையும் அதிகரிக்கிறது. இந்த புதுமையான உத்தியின் காரணமாக முலைக்காம்பு தோல மற்றும் மார்பகம் ஆகியவை அறுவைசிகிச்சைக்குப் பிறகும்கூட அப்படியே.
தக்கவைக்கப்படுகிறது. அதற்கும் மேலாக மார்பகத்தின் முழுமையான வடிவமைப்பும் மாறாமல் பாதுகாக்கப்படுகிறது இந்த புதிய உத்தியை அறிமுகம் செய்வதன் மூலம் சாத்தியமுள்ள சிறந்த அழகியல் விளைவுகளை எமது நோயாளிகளுக்கு வழங்குவதும் மற்றும் அறுவைசிகிச்சைக்குப் பிறகு சிறப்பான வாழ்க்கைத்தரத்தை உறுதிசெய்வதும் எமது நோக்கமாகும் என்று கூறினார்.
அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட்-ன் செயலாக்க துணைத்தலைவர் டாக்டர் ப்ரீத்தா ரெட்டி, இந்த புரட்சிகர சாதனை குறித்து பெருமையையும் பெருமிதத்தையும் வெளிப்படுத்தி கூறியதாவது டாக்டர் வெங்கட் மற்றும் டாக்டர் பிரியா ஆகியோரது தலைமையின்கீழ் செயல்படும் எமது ரோபோட்டிக் அறுவைசிகிச்சை குழுவின் இந்த அசாதாரண வெற்றியினை காண்பது பெருமகிழ்ச்சியையும் அளவில்லா உற்சாகத்தையும் தருகிறது டா வின்சி என்ற ரோபோ சாதனத்தின் உதவியோடு முலைக்காம்பை நீக்காமல் தக்கவைத்துக்கொண்டு இருபக்க மார்பக கட்டியை அகற்றும் தெற்காசியாவின் முதல் அறுவைசிகிச்சை என்ற சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பது பெருமையளிக்கிறது. இந்த புதுமையான அறுவைசிகிச்சையின் சிறப்பான முடிவுகள் இந்தியாவின் முதன்மையான ரோபோ உதவியுடனான மார்பக அறுவைசிகிச்சை செயல்திட்டம் வெற்றிகரமாக தொடங்கப்பட்டிருப்பதை உரத்த குரலில் அறிவிக்கிறது அறுவைசிகிச்சை செயல்நேர்த்தியில் பதிய தரநிலையை நிறுவியிருக்கும் இந்த முயற்சி நவீன தொழில்நுட்பமும் கனிவான பராமரிப்பும் ஒருங்கிணைகிற ஒரு புதிய எதிர்காலத்திற்கான பாதையை அமைக்கிறது புற்றுநோய் சிகிச்சையில் பெண் நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. பொதுப்படையாக பார்க்கையில் உயர்தரமான சிகிச்சையை வழங்குவதிலும் மற்றும் நவீன உடல்நல சிகிச்சையை அனைவரும் பெற்று பயனடையுமாறு ஆக்குவதிலும் எங்களது தளர்வற்ற பொறுப்புறுதிக்கு இது ஒரு நல்ல சான்றாகும்.
உலகளவில் பெண்களிடம் மிக அதிகமாக காணப்படும் புற்றுநோயாக இருப்பது மார்பக புற்றுநோயே புற்றுநோய் தொடர்பான உயிரிழப்புகளில் இரண்டாவது முன்னணி காரணமாகவும் இதுவே இருக்கிறது மார்பக புற்றுநோய் நிகழ்வுகள் குறிப்பாக இளவயது பெண்களில் அதிகரித்து வருவதை தெளிவாக உணர்ந்திருக்கும் அப்போலோ கேன்சர் சென்டர் நோயாளிகளுக்கான சிகிச்சை பலன்களை மேம்படுத்த மிக நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதிலும் புதிய உத்திகளை பயன்படுத்துவதிலும் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது.