சென்னை:
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்தது.
தங்கத்தின் மீது ஆசை இல்லா பெண்கள் தான் உண்டா. நகைகளை அணிந்து செல்வதில் பெண்களுக்கு அபார மகிழ்ச்சி. தற்போது ஆபரணத் தங்கம் மார்க்கெட்டில் விலை உயர்வதும், குறைவதும் என்று மாறி மாறி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு தங்கத்தின் விலை குறைந்துகொண்டே வந்தது. இதனால் நகை பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அதற்கு மாறாக தற்போது ஒரேயடியாக ஏற்றம் கண்டுவந்தது. இதனால் நகை பிரியர்கள் வேதனையடைந்தனர். இன்று மேலும் விலை கூடியிருக்கிறது. அது மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.44,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,545க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் அதிகரித்து ரூ.76-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு