சென்னை எம்எல்ஏ ஹாஸ்டல் உட்பட அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் 2011 – 2016 வரை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர் தொடர்புடைய இடங்களில் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
தனியார் நிறுவனம் குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்க 27.90 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளது. தஞ்சை ஒரத்தநாடு அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் சென்னையில் எம்எல்ஏ விடுதியில் உள்ள வைத்திலிங்கம் அறையிலும் அமலாகத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வைத்திலிங்கம் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.