தொழிலாளர் நாள் அல்லது உழைப்பாளர் நாள் என்பது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். அது தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது. அதிகபட்சமான நாடுகள் தொழிலாளர் தினத்தை மே 1 அன்று கொண்டாடுகின்றன. இந்நாள், பிரபலமாக மே தினம் மற்றும் சர்வதேச தொழிலாளர் நாள் என்று அறியப்படுகின்றது. சில நாடுகள் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கள்கிழமையில் கொண்டாடுகின்றன. இந்தியாவில் தொழிலாளர்கள் வேலை நேரம் 8 மணிநேரமாக குறைக்க வேண்டும் என்று தொழிலாளர்களுக்கான 28 சட்ட மசோதாக்களை வடிவமைத்தார், முன்மொழிந்தார், நிறைவேற்றினார், அமல்படுத்தினார்.
அவர் தான் பாபாசாஹிப் டாக்டர் பிஆர். அம்பேத்கர் (M.A., Ph.D., M.Sc., D.Sc., Barrister-at-Law, L.L.D., D.Litt) அவர்கள்.
அவை:-
- சம வேலைக்கு பாலின பேதமற்ற சம ஊதியம்
- தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை நேரத்தை நீக்கி 8 மணி நேர வேலை திட்டத்தை அமுல்படுத்தினார்
- முத்தரப்பு தொழிலாளர் மாநாட்டை, ஆகஸ்டு 7, 1942ல் புது டில்லியில் நடத்தினார். முத்தரப்பு பேச்சுவார்த்தையை அமுல்படுத்தினார்.
- சுரங்க பெண் தொழிலாளர்கள் மகப்பேறு அனுகூலச் சட்டம்
- பெண் தொழிலாளர்கள் சேமநல நிதி
- பெண்கள் மற்றும் குழந்தைகள், தொழிலாளர் பாதுகாப்பு சட்டம்
- பெண் தொழிலாளர் மகப்பேறு அனுகூலம்
- நிலக்கரி சுரங்கங்களில் நிலத்தடி வேலைத் திட்டத்தில் பெண்கள் வேலைவாய்ப்பு குறித்த தடை மீட்பு
- தொழிற்சங்கங்களை கட்டாயமாக அங்கீகரித்தல்
- தேசிய வேலைவாய்ப்பு மையங்கள்
- ஊழியர் அரசாங்க காப்பீட்டு திட்டம்
- குறைந்தபட்ச ஊதிய திட்டம்
- நிலக்கரி மற்றும் மைகா சுரங்கங்கள் வருங்கால வைப்புநிதி திட்டம்
- தொழிலாளர் சேமநல நிதி
- தொழில்நுட்ப பயிற்சி திட்டம் மற்றும் திறன் தொழிலாளர்கள் திட்டம்
- மகப்பேறு நலச் சட்டம்
- கிராக்கிப்படி
- தொழிற்சாலை தொழிலாளர் சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட்கள்
- தொழிற்துறை ஊழியர்களுக்கான சுகாதார காப்பீடு
- சட்டப்பூர்வ வேலைநிறுத்தம்
- வருங்கால வைப்புநிதி சட்டம்
- ஊழியர் சம்பள உயர்வு மீளாய்வு செய்தல்
- இந்திய தொழிற்சாலை சட்டம்
- இந்திய தேயிலை கட்டுப்பாடு மசோதா,
- இந்திய தொழிற்சாலைப் பணியாளார்களுக்கான வீட்டு வசதித் திட்டம்,
- மோட்டார் வாகனங்கள் (ஓட்டுனர்) மசோதா
- தொழிலாளர்கள் மறுவாழ்வுத் திட்டம்
- தொழிலாளர் இழப்பீடு (திருத்த) மசோதா
மே 1 தொழிலாளர் தினத்தை கொண்டாடுவோம்…
பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களை நினைவு கூறுவோம்