சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ஆண்கள் அங்கீகரித்தால் பெண்களுக்கான சமூக உரிமை வழங்கிடும் நிலை உருவாகும் என இந்த அரசு நம்புகிறது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத பல உன்னதமான திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டின் மகத்தமான திட்டமான மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஒரு ஆணுடைய வெற்றிக்காகவும், குழந்தைகளின் கல்வி, சமூகத்திற்காகவும் எத்தனை மணி நேரங்கள் அவர்கள் உழைத்திருப்பார்கள்? அவர்களுக்கான ஊதியம்தான் இது. பெண்களுக்கான சமூக பொருளாதாரத்தை மீட்க எவ்வளவோ தலைவர்கள் வந்தாலும் பெரியாரின் சுயமரியாதை இயக்கமே பெண் விடுதலைக்கு பாதை அமைத்தது.
கிராம பொருளாதாரத்தை சுமப்பவர்களாக பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறக்க முடியாது. பல்வேறு வகைகளில் விலைமதிப்பில்லாத உழைப்பை வழங்கும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள். ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.
மீனவ பெண்கள், சிறுகடை வைத்திருக்கும் பெண்கள், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான வழிகாட்டு முறைகள் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு