புதுடெல்லி:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தாம் எம்.பி யாக இருந்த வயநாடு தொகுதிக்கு நாளை செல்ல உள்ளார். அங்குக நடைபெறும் பொதுக்கூட்டம் மற்றும் பேரணியில் பங்கேற்க உள்ளார்.
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தியின் எம்.பி பதவி ரத்து செய்யப்படுவதாக அன்மையில் மக்களவை செயலகம் அறிவித்தது. டெல்லியில் ராகுல் வசித்து வந்த அரசு இல்லத்தை காலிசெய்யுமாறு ஒன்றிய அரசு உத்தரவிட்டதோடு. வயநாடு பகுதி ராகுல் காந்தி அலுவலகத்தில் தொலைபேசி மற்றும் இணையதள இணைப்பையும் துண்டித்தது.
காங்கிரஸ் தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நடவடிக்கைகளுக்கு பிறகு முதன் முறையாக கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு நாளை ராகுல் காந்தி செல்லவுள்ளார். அங்கு காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் பிரமாண்டமான பேரணியில் அவர் பங்கேற்கவுள்ளார். இதை தொடர்ந்து பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.
எனவே நாளை வயநாட்டில் நடைபெறும் கூட்டத்தில் திராளோர் பங்கேற்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தியுடன் தேசிய மூத்ததலைவர்கள் பலரும் உடன் செல்கின்றனர். மோடி என்ற பெயர் குறித்து கர்நாடகத்தில் பிரச்சாரத்தின் போது பேசிய ராகுல் காந்தியின் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. தற்போது அவர் ஜாமீனில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.