சென்னை:
சென்னை பெருங்குடி ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (வயது 33). சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த மார்ச் 25-தேதி இரவு ஜெய்கணேஷ் தனது வீட்டருகே நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியது. இச்சம்பவத்திற்கு வழக்கறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த 27-ம் தேதி இக் கொலை சம்பவம் தொடர்பாக 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண்.1-ல், சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் பகுதியைச் சேர்ந்த முருகன் (26), நுங்கம்பாக்கம் தெற்கு மாடவீதியைச் சேர்ந்த பிரவீன் (23), மண்ணூர்பேட்டை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர் (27) ஆகியோர் நடுவர் ராதிகா முன்னிலையில் சரணடைந்தனர்.
இந்தநிலையில், ஜெய்கணேஷ் கொலை சம்பவத்தை தொடர்ந்து வழக்கறிஞர்கள் நேற்று (மார்ச் 28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை’ அரசு இயற்ற வேண்டும். ஜெய்கணேஷ் கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், வழக்கறிஞர்கள் சங்கம், பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இன்று காலை 10 மணியளவில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில், உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். வழக்கறிஞர் ஜெய்கணேஷ் வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் வாதாடக்கூடாது. கொலையண்ட ஜெய்கணேஷ் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும். வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு