1. தமிழகத்தில் உடனடியாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதனால் அனைத்து மக்களின் விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக அமையும். இதனால் அனைத்து மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கல்வி உயர வழிவகை செய்யும் இதனை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
2. ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு சதந்திர தின அணிவகுப்பில் இந்திய சுதந்திரத்திற்கு பெரிதும் போராடிய வன்னிய பெருந்தலைவர்களின் வரலாற்றைக் காட்சிப்படுத்த வேண்டும்.
சேலம் அர்த்தநாரீச வர்மா (1874 – 1964)
கடலூர் அஞ்சலை அம்மாள் (1890 – 1961)
மயிலாடுதுறை சாமி நாகப்ப படையாட்சியார் (1891-1909)
சென்னை சர்தார் ஆதிகேசவ நாயக்கர் (1898-1964)
இந்தியா சுதந்திரம் அடைந்தற்கு இவர்களின் தியாகம் அளப்பரியது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் தமிழக அரசு நடத்துகின்ற குடியரசு தின, சுதந்திர தின விழாக்களில் இந்த தலைவர்களை பற்றிய சித்தரிக்கும் காட்சிகள் இதுவரை வாகன அணி வகுப்பில் இடம் பெறவில்லை. இவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் வருகின்ற குடியரசு தின சுதந்திர தின விழாவில் இவர்களுக்கான மரியாதையும் இவர்களுடைய சிறப்பையும் சித்தரித்து காட்சிகளாக அணிவகுப்பில் இடம் பெற வேண்டும்.
3. 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட வன்னியர் இட ஒதுக்கீடு 25 தியாகிகளுக்கான மணிமண்டபம் அவர்தம் குடம்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையை உடனடியாக வழங்க வேண்டும்.
தி.மு.க வுக்கு உதயசூரியன் சின்னத்தை கொடுத்தவரும் தி.மு.க ஆரம்ப நிலை முக்கிய தலைவரும் தொன்னாற்க்காடு மாவட்டம் தந்த திரு.ஆ.கோவிந்தசாமி படையாட்சியார் அவர்களுக்கு 2 கோடி ரூபாய் செலவில் விழுப்புரத்தில் சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும் என்ற அறிப்பு செய்த தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
4. வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5% (W.P No.14025/2010)
வழக்கின் அடிப்படையில் அரசாணை என் 35/2012 வன்னியர்களுக்கு மட்டும் 15% உள் ஒதுக்கீடு 20% கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபின் 2012ல் நீதிமன்றத்தில் வெற்றி பெற்று அரசாணை மற்றும் 2015 ல் நீதிமன்ற இறுதி ஆணையைப் பெற்று அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட நல வாரிய ஆணையத்தின் 10.5% பரிந்துரையை பெற்று தமிழக அரசு செயல்படுத்த காலம் தாழ்த்தியதால் தமிழக அரசுக்கு எதிராக நான் 2021 பிப்ரவரி 2 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பின் நீதிமன்ற நெருக்கடியான சூழலில் தமிழக அரசு தன்னுடைய கடைசி சட்டமன்ற கூட்டத்தில் வன்னியர் உள் ஒதுக்கீட்டிற்கான சட்டம் இயற்றியது. 2021ல் தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது. இப்பொழுது தவறான புரிதல் காரணமாக நீதிமன்றத்தின் மூலமாக தடைப்பட்டுள்ளது. மீண்டும் உரிய தரவுகள் கொண்டு ஒதுக்கீடு செயல்படுத்த வேண்டும்.
5. வன்னியர் பொது சொத்து நல வாரியம் (W.P. No. 26565/2011)
வன்னியர் பொது சொத்துநல வாரியம் (240 வன்னியர் அறக்கட்டளையில் ஒன்றிணைத்து சுமார் பத்து லட்சம் கோடி இதன் மதிப்பு) நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு பின் 2018 இல் ஜனாதிபதியின் ஒப்புதலோடு 44 வது சட்டமாக இயற்றப்பட்டது. இன்றளவும் இது சரிவர செயல்படாமல் இருக்கிறது. இதனை முறையாக செயல்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
6. வன்னியர் நல வாரியம் (W.P. No.20544/2012)
வன்னியர் மக்களின் வாழ்வாதாரத்தின் மேம்பாட்டிற்காக அரசின் நிதிநிலை அறிக்கையில் தனியே நிதி ஒதுக்கி மக்களின் வாழ்வாதாரத்திற்காக செயல்படுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றுள்ளோம். இதனை செயல்படுத்த வேண்டும்.
மேற்கண்ட வன்னிய பெருங்குளத்தின் நீண்ட கால கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வன்னியர் கூட்டமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.