வயநாடு நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நமது இயக்கத்தின் நம்பிக்கை நட்சத்திரம் திருமதி. பிரியங்கா காந்தி அவர்கள் 23.10.2024 அன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தலைவர் ராகுல்காந்தி அவர்கள் மீது பற்றும், பாசமும் கொண்டு முழு நம்பிக்கையோடு கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களில் மாபெரும் வெற்றியை வயநாடு வாக்காளப் பெருமக்கள் பெற்றுத் தந்தனர். அதேபோல், இந்த இடைத் தேர்தலிலும் திருமதி. பிரியங்கா காந்தி அவர்களை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டியது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களுடைய தலையாய கடமையாகும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருமதி. பிரியங்கா காந்தி அவர்களின் வெற்றிக்காக தேர்தல் பணியாற்றிட எனது தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளோம். வருகிற நவம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல் தேர்தல் பரப்புரையின் இறுதி நாளான நவம்பர் 11 ஆம் தேதி மாலை வரை இந்த தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் வயநாடு தொகுதியில் தேர்தல் பணியாற்றிட உள்ளார்கள். எனது தேர்தல் பரப்புரை நவம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் துவங்கப்பட உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நடைபெறவுள்ள வயநாடு நாடாளுமன்ற இடைத் தேர்தலில் திருமதி. பிரியங்கா காந்தி அவர்களின் வெற்றிக்கு பணியாற்றிட விருப்பமுள்ள தமிழகத்தைச் சார்ந்த காங்கிரஸ் கமிட்டியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் தமிழக காங்கிரஸ் கமிட்டியால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களோடு இணைந்து பணியாற்றுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எனவே, வயநாடு நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பணியாற்ற விருப்பமுள்ள நமது இயக்க நண்பர்கள் தங்களுடைய விருப்பத்தை தமிழக காங்கிரஸ் தலைமையகத்திற்கு உடனடியாக தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.
(கு.செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.)
வயநாடு நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பணிக்குழு
திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.
திரு. எஸ்.ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ.
திரு. கே.வி. தங்கபாலு, Ex.MP
திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன், எம்.எல்.ஏ.
திரு. சு.திருநாவுக்கரசர், Ex.MP
திரு. எம். கிருஷ்ணசாமி, Ex.MP
திரு. கே.எஸ். அழகிரி, Ex.MP
திரு. கே. கோபிநாத், எம்.பி.
செல்வி எஸ்.ஜோதிமணி, எம்.பி.
டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத், எம்.பி.
திரு. கார்த்தி ப சிதம்பரம், எம்.பி.
திரு. விஜய் வசந்த், எம்.பி.
திரு. சி. ராபர்ட் புரூஸ், எம்.பி.
டாக்டர் ரூபி ஆர்.மனோகரன், எம்.எல்.ஏ.
திரு. ஏ.எம். முனிரத்தினம், எம்.எல்.ஏ.
திரு. ஜே.எம்.எச். ஹசன் மௌலானா, எம்.எல்.ஏ.
திரு. ஜே.ஜி. பிரின்ஸ், எம்.எல்.ஏ.
திரு. எஸ். ராஜ்குமார், எம்.எல்.ஏ.
திரு. ஆர்.கணேஷ், எம்.எல்.ஏ.
திரு. ஆர். ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.
திரு. எஸ். பழனிநாடார், எம்.எல்.ஏ.
திரு. எஸ்.டி. ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.
திருமதி. தாரகை கத்பர்ட், எம்.எல்.ஏ.
வழக்கறிஞர் துரை சந்திரசேகர், எம்.எல்.ஏ.
திரு எஸ்.அமிர்தராஜ், எம்.எல்.ஏ.
திரு. எஸ்.மாங்குடி, எம்.எல்.ஏ.
திரு. ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன், எம்.எல்.ஏ.
திரு. ஆர்.எம். கருமாணிக்கம், எம்.எல்.ஏ.
திரு. ஆ.கோபண்ணா
திரு. சொர்ணா சேதுராமன்
திரு. டி.செல்வம்
திரு. கே.தணிகாசலம்
திரு. என். அருள் பெத்தையா
திரு. செ. ராம் மோகன்
திரு. கோஷி பேபி
திரு. விவேகானந்த் லஜபதி
டாக்டர் அழகு ஜெயபாலன்
திரு. வி.எம்.சி. மனோகரன்
வழக்கறிஞர் கே.கருப்புசாமி
திரு. என்.கே.பகவதி
திரு. டி.நாகராஜ்
திரு. அனஸ் எதாலத்
திருமதி பிரியா நஷ்மிகர்
திரு முகம்மது அஷ்ரப் – பந்தலூர்
திரு நெல்லியாளம் ஷாஜி