சென்னை:
வருமான வரித்துறை கூட்டுறவு வங்கியில் Executive Officer மற்றும் Clerk பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 11 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் மார்ச் 28 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Executive Officer – 3 பணியிடங்கள் மற்றும் Clerk– 8 பணியிடங்கள் என மொத்தம் 11 பணியிடங்கள் காலியாக உள்ளன.
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
31-03-2023 அன்று குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 35 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Executive Officer பதவிக்கு ரூ.35,000/- மற்றும் Clerk பதவிக்கு ரூ.21,000/- என ஊதியம் வழங்கப்பட உள்ளது.
வருமான வரித் துறை கூட்டுறவு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான incometaxbank.co.in இல் ஆன்லைனில் 28-மார்ச்-2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு