பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற 25.01.2025 அன்று ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் தனி வட்டாட்சியர் (கு.பொ)/ வட்ட வழங்கல் அலுவலர்களால் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது.இக்குறைதீர் முகாம்களில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை வேண்டி முகாமில் கோரிக்கையினையும், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தலுக்கான தனியான கோரிக்கை மனுவினையும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரச்சான்று கோரும் கோரிக்கை மனுவினையும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களையும், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களையும் குடும்ப அட்டைதாரர்கள் தனி வட்டாட்சியர் (கு.பொ)/ வட்ட வழங்கல் அலுவலர்களிடம் கொடுத்துக்கொள்ளலாம்.மேற்படி, இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு பொது மக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை தீர்த்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு