சென்னை:
சென்னை நிருபர்கள் சங்கம் சேப்பாக்கத்தில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் வசிக்கும் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவுகளை கலந்தவர்கள் யார்? குற்றவாளிகளை கண்டுபிடிக்க தடையாய் இருப்பது எது? என்பது குறித்த கருத்தரங்கம் இந்திய குடியரசுக் கட்சி தலைவர் டாக்டர்.செ.கு.தமிழரசன் தலைமையில் நடைபெற்றது. இக்கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜி.துர்வாசன் வரவேற்றார். ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.கே.கிருஷ்ணன் கருத்துரை வழங்கினார்.
கருத்தரங்கில் மனித உரிமை செயல்பாட்டாளர், பத்திரிகையாளர் பல்கலைக்கழக பேராசிரியர், எழுத்தாளர், மற்றும்ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் பிரபு, வழக்கறிஞர் ச.கல்பனா, பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை இந்திய குடியரகு கட்சி இரா.அன்பு வேந்தன் செய்திருந்தார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு