சென்னை:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சட்டபேரவையில் ஆற்றிய உரையில், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனை, தினந்தோறும் 1,350 அளவுக்கான புறநோயாளிகளையும், 135 அளவில் உள் நோயாளிகளையும் பெற்றிருக்கின்ற ஒரு மருத்துவமனை. 24 மணி நேரமும் பிரசவம் என்கின்ற வகையில் மாதந்தோறும் 150 பிரசங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த மருத்துவமனையைப் பொறுத்தவரையில் இப்போது onventional X-ray என்கிற வகையில் தினந்தோறும் 25-லிருந்து 30 பேருக்கு தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனாலும் தமிழ்நாட்டின் முதலமைச்சருடைய அறிவுறுத்தலை, வழிகாட்டுதலைப் பெற்று உறுப்பினர் கோரியிருக்கின்ற நவீன எக்ஸ்ரேவும், சி.டி.ஸ்கேன் இயந்திரத்தையும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஸ்ரீவில்லிபுத்தூரைப் பொறுத்தவரையில், ஒரு மிகச்சிறந்த ஆன்மிக சுற்றுலா மையமாக இருந்து கொண்டிருக்கின்ற காரணத்தால், உறுப்பினர் எடுத்துச்சொல்லியிருப்பதைப்போல, சி.டி.ஸ்கேன், நவீன எக்ஸ்ரே கருவிகளை அம்மருத்துவமனையில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்ட அரசு மருத்துவமனையைப் பொறுத்தவரை இப்போதும்கூட Tl CEmONC கட்டடம் ஒன்று தமிழ்நாட்டின் முதலமைச்சருடைய வழிகாட்டுதலின்படி, 6 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகளுக்கான பராமரிப்பு பிரிவு கட்டடமாக அந்தக் கட்டடப் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாது கர்பிணிப் பெண்கள் மற்றும் விபத்தில் காயமடைந்து வருபவர்களுக்கான சிகிச்சை அளிப்பதற்கு 25 லட்சம் செலவில் ரத்த வங்கி கட்டடம் ஒன்றும் அம்மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஏற்கெனவே, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்குட்பட்ட கோமாப்பட்டி துணை சுகாதார நிலையம் 25 லட்சம் மதிப்பீட்டிலும், வா.புதுப்பட்டி துணை சுகாதார நிலையம் 20 லட்சம் மதிப்பீட்டிலும், கோட்டையூர் துணை சுகாதார நிலையம் 20 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. தற்போதும்கூட அந்த தொகுதியில் இடையன்குளம் துணை சுகாதார நிலையம் 20 இலட்சம் மதிப்பீட்டிலும், மல்லி துணை சுகாதார நிலையம் 20 இலட்சம் மதிப்பீட்டிலும், இராமசாமிபுரம் துணை சுகாதார நிலையம் 20 இலட்சம் மதிப்பீட்டிலும், குன்னூர் வட்டார பொது சுகாதாரப்பிரிவு கட்டடம் 50 லட்சம் செலவிலும் கட்டும் பணிகள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.
இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் தேவையான சுற்றுச்சுவர்களை இந்த நிதிநிலையாண்டில், 15 வது நிதி ஆணையத்தின்மூலம் பெறப்படுகிற நிதியின்மூலம் அந்த இரண்டு சுகாதார நிலையங்களுக்கும் கட்டித் தருகிற பணி நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.
மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கேற்ப 1,021 மருத்துவர் பணியிடங்கள் M.R.Bன் மூலம் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், அதற்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் 2,3 வாரங்களில் அந்தத் தேர்வுப் பணிகள் முடிவுறும் நிலையில் இருக்கிறது. 1,021 பணியிடங்களுக்கு 25,000 மருத்துவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். அவர்களின் 1,021 மருத்துவர்களைத் தேர்வு செய்து, மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவர் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு