நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உடைய இந்திய குடிமக்களாகிய நாங்கள் 100% வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்துடன் கூடிய நடமாடும் வாகனத்தினை ரிப்பன் கட்டட வளாகத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்து விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் சீ.குமார், கதிர்வேலு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

