கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை ஏலாக்கரை பகுதியை சார்ந்த ஜோணி அமிர்த ஜோஸ் ஸ்மிதா இவர்களின் இளைய மகள் ஜோ.ஸ்.தீக்ஷா என்பவர் நித்திரவிளை கிறிஸ்துராஜபுரம் ஜெயமாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் 10-02-2021 முதல் தினம் ஒரு திருக்குறள் என்னும் தலைப்பில் தினம் ஒரு திருக்குறள் சொல்லி காணொளியை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து பரப்புரை செய்து வந்தார். அப்போது இவரது வயது 9 ஆகும்.இவரது திருக்குறள் காணொளிகளை புலனம் வாயிலாக தனி நபர்களும் திருக்குறள் அமைப்புகளும் திருக்குறள் ஆர்வலர்களும் பரப்புரை செய்து வந்தனர். திருவள்ளுவர் தினமான ஜனவரி 15 ஆம் தேதி 1330 வது திருக்குறளை நிறைவு செய்தார்.இவரது சிறுவயது சாதனையை பாராட்டி நித்திரவிளை ஜோஸ் திரஜ்பண்பாட்டுசேவாஅறக்கட்டளையை சார்ந்த உலக சாதனையாளர் கலை இளமணி ஜோ.ஸ். தீரஜ் பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டினார். மேலும் நித்திரவிளை பகுதியை சேர்ந்த பொறியாளர் பெபின் ரமேஷ் மாணவியின் வீட்டிற்கு நேரில் வந்து பயனாடை அணிவித்து பாராட்டினார்.நித்திரவிளையை சார்ந்த கவிஞர் சந்தோஷ் முரசங்கோட்டை சார்ந்த கவிஞர் வி.யேசுராஜ் திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த கவிஞர் வங்கனூர் சீனிவாசன் ஆகியோர் காணொளி வாயிலாகவும் மற்றும் பலர் புலனம் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்து மாணவியை பாராட்டினார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு