திருத்தங்கல் நாடார் உறவின்முறை தர்ம பண்டு சங்கத்தின் (PAN ராஜரத்தினம் சாலை,113, ரோடு, பழைய வண்ணாரப்பேட்டை சென்னை -600021) நிரந்தர உறுப்பினராகிய நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். என்னுடைய தந்தை மறைந்த திரு எஸ்.சந்திரசேகரன் அவர்கள் 40 ஆண்டுகள் இச்சங்கத்தின் உறுப்பினராகவும், நிர்வாகக் குழுவிலும் இருந்தார். நான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இச்சங்கத்தின் உறுப்பினராக இருந்து வருகிறேன்.இந்நிலையில் சங்கத்தில் தற்போது நிர்வாகிகளாக உள்ள 1. செல்லப்பழம் 2.சுப்பையா 3. செல்லப்பா 4.ராஜமூர்த்தி 5.நாராயணமூர்த்தி 6.சபரிமலையான் 7. சீனிவாசன் 8.பெரியாண்டவர் 9.சுப்பிரமணி 10 பாஸ்கர் 11.சண்முகராஜன் 12ராஜா 13 செல்வகுமார் ஆகியோர் சங்கத்தின் பெயரில் முறையற்ற முறையில் ஏலச்சீட்டு நடத்தி, சுமார் 1500 கோடி ரூபாய் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கிறார்கள் மேலும் இரட்டை PAN CARD வைத்துக்கொண்டு வருமான வரித்துறை சட்டத்திற்கு எதிராகவும் ஊழல் செய்து வருகிறார்கள்.இவ்வாறு கருப்புப் பணம் ஊழலில் ஈடுபட்டது தொடர்பாக கேள்வி கேட்டதற்காகவும், சங்கத்தின் வரவு செலவு கணக்கு கேட்டதற்காகவும், இந்த முறைகேடுகள் தொடர்பாக சங்கத்தில் புகார் எழுப்பி வருவது தொடர்பாகவும் என் மீது கோபம் கொண்டு, அவர்களின் முறைகேடுகள் மற்றும் சதித்திட்டங்கள் காவல் துறைக்கும், வருமான வரித்துறைக்கும் தெரிந்துவிடும் என்பதாலும், என்னை கூலிப்படையை ஏவி கொலை செய்ய திட்டமிட்டு வருகிறார்கள்.இதற்காக 15 லட்ச ரூபாய் கூலிக்கு, ஆட்களை அமர்த்தியிருக்கிறார்கள். இதற்கு முதற்கட்டமாக கூலிப்படையினருக்கு 7 லட்சம் ரூபாய் முதல் தவணையாக வழங்கியிருக்கிறார்கள் இதுதொடர்பாக நான் ஏற்கனவே சென்னை காவல் துறை ஆணையாளர் அவர்களிடம் புகார் அளித்திருக்கிறேன். புகார் தொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.காவல் துறையில் நான் தொடர்ந்து புகார்கள் அளித்து வருவதை தெரிந்துகொண்டு கூலிப்படையினரை தற்போது சங்கத்தின் நிர்வாகிகள் தங்களின் சொந்த பாதுகாப்பில் குற்றாலத்தில் பதுக்கி வைத்திருக்கிறார்கள்.எனவே இந்திய அரசியல் சட்டம் மற்றும் இந்திய பொருளாதார சட்டப்பிரிவுகளுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மேற்கண்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் எனக்கும் என் குடும்பத்தினரின் உயிருக்கும் அச்சுறுத்தல் மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு வருவதற்காகவும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து, தீவிரமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு உத்திரவிடக்கோரி வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.என் உயிருக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், எனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் போலீஸுக்கு பரிந்துரை அளிக்க கோரிக்கை விடுக்கிறேன்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு