சென்னை:
சென்னையின் பழைய 169வது வட்ட திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இ.எல்லப்பன் 3ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நாளை (25ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது.
தி.மு.க. நிர்வாகி இ.எல்லப்பன், தலைவர் கலைஞர் பொதுப்பணி மன்றம் 1970ம் ஆண்டு கக்கன்புரம் பகுதியில் தொடங்கி, மன்ற செயலாளராக பொறுப்பு வகித்தவர்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக இரவு பாடசாலை நடத்தி வெற்றி கண்டவர். திமுக அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்துகொண்டு 3 முறை சிறை சென்று சைதை பகுதியில் கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டவர். தலைவர் கலைஞர் தன் உயிர் உள்ளவரை உயிர் மூச்சாக நினைத்தவர். பழைய 139வது வட்டத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து கட்சிப்பணியாற்றியவர் தலைவர் கலைஞரால் பாராட பெற்றவர். இ.எல்லப்பன். இவர் கடந்த 25.3.2021ம் ஆண்டு இயற்கை எய்தினார். இவரது 3ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாளை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள கருணை இல்லத்தில் உள்ளவர்களுக்கு காலை சிற்றுண்டியும், மதியம்உணவும் வழங்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை அவரது மகனும், சென்னை தெற்கு மாவட்டம் சைதை கிழக்கு பகுதி திமுக ஆதிதிராவிடர் நலப்பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் எ.கௌதம் மற்றும் குடும்பத்தினர் செய்துள்ளனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு