ஆளுமை மிக்க கிறித்தவ மக்களின் அரசியல் அடையாளம் பேராயர் எஸ்ரா சற்குணம் அவர்கள் ஆலயத்தை அடைகாக்கும் அடை கோழியாக ஆயர் பேராயர்கள் ஆலயத்தை விட்டு வெளியே வராமல் இருந்த காலத்தில் ஆயர்களை அரசியலில் ஈடுபட வைத்தவர் அய்யா எஸ்ரா சற்குணம் அவர்கள் கிறித்தவ மக்களின் தைரியமிக்க தலைவராக ஆன்மீக தளத்தில் சிறந்த பேராயராக சாதித்து காட்டி மூன்று முறை மைனாரிட்டி கமிஷன் தலைவராக இருந்தவர் பேராயர் எஸ்ரா சற்குணம் அவர்கள் தமிழகத்தில் முதலமைச்சரோடும் மற்ற எல்லா தலைவர்களோடும் குறிப்பாக தலைவர் திருமாவளவன் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக பழகியவர் கிறித்தவர்கள் அரசியல் அதிகாரத்தில் நுழைய முதலமைச்சருக்கு நெருக்கமாக இருந்தவர் பேராயர் எஸ்ரா சற்குணம் இவரின் துணிச்சலான செயலை முன்னெடுத்து செல்பவர் தமிழக அரசிடம் சமய நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் இவரை போன்ற ஆளுமை தேவை.
கிறித்தவ சமூகநீதி பேரவை விசிக நடத்தும் விழாவில் ஒவ்வொரு ஆண்டும் இவரோடு நான் கலந்து கொள்வேன் தம்பி வல்லரசு என்று பாசமுடன் அழைப்பார் பொன்பரப்பியில் தலித்துகளின் குடிசை தாக்கப்பட்டபோது அதை எதிர்த்து தனது முதல் கண்டனத்தை பதிவு செய்தவர் பேராயர் எஸ்ரா சற்குணம் தாழ்த்தப்பட்டோரை ஒதுக்கப் பட்டவர்களை ஆயர்கள் பேராயர்கள் என்ற பதவியை வாரி வழங்கி சாமானியர்களை ஆயர்களாக பேராயராக உருவாக்கி தமிழக கிறித்தவர்கள் மத்தியில் தன் மதிப்பை பெற்றவர் கிறித்தவ சமூகநீதி பேரவை விசிக நடத்தும் விழாவில் ஒவ்வொரு ஆண்டும் இவரோடு நானும் தோழர் புனிதரசும் கலந்து கொள்வோம்
கிறித்தவர்கள் இட ஒதுக்கீடு பெற வேண்டும் என்று சமூகநீதி களத்தில் கிறித்தவர்களுக்கு குரல் கொடுத்தவர் பேராயர் Dr.எஸ்ரா சற்குணம் அவர்கள் அவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற வேண்டுகிறோம் !!!
இருதயம் வல்லரசு MABL
மக்கள் மேம்பாட்டு கழகம்