பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் ஆட்டங்களை இந்திய வென்றது. 3வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்ற நிலையில், 4வது மற்றும் கடைசி டெஸ்ட் டிரா ஆனது. பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் கடைசி டெஸ்ட் ஆட்டம் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே அகமதாபாத் நகரில் நடந்து வருகிறது.
4வது டெஸ்ட் கிரிக்கெட் டிரா ஆனது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்களை குவித்தது. கவாஜா 180 ரன்களை விளாசினார்.
கிரீன் சதம் பதிவு செய்தார். இந்நிலையில், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, நிதானமாக விளையாடி 571 ரன்களை குவித்தது. அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இந்தியா 178.5 ஓவர்களில் இந்த ஸ்கோரை எட்டியது.
இந்தியா 91 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 4வது நாளிலேயே ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது.
விராட் கோலி, 186 ரன்களை விளாசினார். மொத்தம் 364 பந்துகளை எதிர்கொண்ட அவர், இந்த ஸ்கோரை பதிவு செய்தார். அவர் 15 பவுண்டரிகளை விளாசிய அதேநேரம், ஒரு சிக்ஸர் கூட பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2வது இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 571 ரன்களை குவித்தது. இதையடுத்து, தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி 2 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை எடுத்து விளையாடி வந்தது.
இன்றே 4வது டெஸ்ட் ஆட்டத்தின் கடைசி நாள் என்பதால் இந்த ஆட்டம் பெரும்பாலும் டிரா ஆகவே வாய்ப்பிருப்பதாகத் தெரிந்தது. அவ்வாறே டிராவும் ஆனது. 78.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை ஆஸி., எடுத்திருந்தபோது ஆட்டம் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.
இந்த டெஸ்டில் தோற்றாலும், டிரா ஆனாலும் இந்திய அணியால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்ல முடியாத நிலை இருந்தது.
அதேநேரம், எந்த ரிசல்ட் வந்தாலும் இலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் முடிவு இந்தியாவுக்கு சாதக-பாதகத்தை ஏற்படுத்தும் என்ற நிலை இருந்தது. அதன்படி, நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வி அடைந்தது.
இதன்காரணமாக, இந்திய அணி புள்ளிகள் அடிப்படையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் ஆட்டங்களை இந்திய வென்றது. 3வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்ற நிலையில், 4வது மற்றும் கடைசி டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து, இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு