ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்தது. முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வந்தார். மொத்தம் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இறுதி சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்றார். மொத்தம் உள்ள 1,74,197 வாக்குகளில் அவர் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி 8,474 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 1,177 வாக்குகளும் பெற்றனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு