சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நீதிமன்ற வளாகங்களில் இனி திருவள்ளுவர், மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் உருவப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும், மற்ற தலைவர்களின் படங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவுத்துறை அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் உயர்நீதிமன்ற சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி நீதிமன்றங்களில் திருவள்ளுவர், மற்றும் மகாத்மா காந்தியின் உருவப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும், அம்பேத்கர் போன்ற மற்ற தலைவர்களின் படங்கள் அகற்றப்பட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் பதிவாளர் ஆணையை திரும்பப் பெற வேண்டும் எனறு தனது கண்டனத்தை வை.கோ தெரிவித்தார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு