சென்னை:
தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து பிற மாநிலங்கள் மாவட்டங்களுக்கு செல்லும் போக்குவரத்து கட்டணம் உயர்ந்துள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற சனிக்கிழமை (நாளை ) முதல் தொடர்ந்து விடுமுறை நாட்களாக உள்ளது. இதனால் சென்னையில் வசிக்கும் பிற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகியுள்ளனர்.
இதனால் சென்னையில் இருந்து பிற மாவட்டங்கள் பிற மாநிலங்களுக்கு செல்லும் பேருந்து, ரயில், விமான கட்டணங்கள் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது 30 சதவீதம் உயர்வு கண்டுள்ளது. சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்ல ஆம்னி பேருந்து நிலையத்தில் குளிர்சாதன பேருந்து 2000 ரூபாயாகவும், சாதாரண பேருந்து ரூ.1400ம் வசூலிக்கப்படுகிறது. சென்னை & நெல்லை குளிர்சாதன பேருந்து ரூ.2,450, சாதாரண பேருந்து ரூ.1,400ம், நெல்லை -& தேனி குளிர்சாதன பேருந்து ரூ.1,650, சாதாரண பேருந்து ரூ.950. சென்னை & மதுரை குளிர்சாதன பேருந்து கட்டணம் ரூ.1,900, சாதாரண கட்டணம் ரூ.900, சென்னை & சேலம் குளிர்சாதன பேருந்து ரூ.1,400ம், சாதாரண பேருந்து ரூ.900மும் வசூலிக்கப்படுகிறது.
விமான கட்டணமும் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து புதுடெல்லி செல்வதற்கு ஏற்கனவே விமானத்தில் ரூ.8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை உள்ளது. ஆனால் தற்போது 15 ஆயிரம் வரை விமான கட்டணம் உயர்ந்துள்ளது. இதுபோல் மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் விமான கட்டணமும் அதிகரித்துள்ளது.