சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சியில் பலவித மாற்றங்கள் வந்துவிட்டன. அதிமுகவில் துணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளரிடையே பல்வேறு பிரச்சனைகள், சசிகலா சிறைக்கு சென்று திரும்பியதும் அவரை கட்சியில் சேர்க்காத நிலை என்று மாற்றங்கள் வந்துவிட்டன. ஓ.பன்னீர்செல்வத்துக்கு கனிசமான ஆதரவாளர்கள் உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் ஆதரவாளர்கள் உள்ளனர். அவரே இடைக்கால பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்தநிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் துவங்கியது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் வளர்ச்சிப்பணிகள், இடைத்தேர்தல் தோல்வி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக – பாஜக இடையே ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
பொதுக்குழு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையடுத்து முதல் முறையாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. முன்னதாக தேர்தல் விதிமுறைகளை மீறி திமுக செயல்பட்டது. தேர்தல் ஆணையம் அதனை கண்டுகொள்ளவில்லை என இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு