தெலுங்கானா மாநில ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் ஒய்.எஸ். ஷர்மிளா.ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான இவர் காங்கிரஸ் கட்சியுடன் தெலுங்கானா ஒய்.எஸ். ஆர். கட்சியை இணைக்க போவதாக சமீபகாலமாக நம்பதக்க தகவல்கள் வந்துள்ளது. காங்கிரசுடனும் அவர் நெருக்கம் காட்டி வந்தார். கர்நாடக துணை முதல்-அமைச்சர் டி.கே. சிவக்குமாரையும் சந்தித்து பேசினார். இந்த நிலையில் அவர் இன்று டெல்லியில் சோனியாகாந்தியை சந்தித்தார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது. இந்த சந்திப்பின் போது ஒய்.எஸ்.ஷர்மிளா தெலுங்கானாவில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? அல்லது காங்கிரசுடன் கட்சியை இணைத்து செயல்படுவதா? என்பது தொடர்பாக விவாதித்ததாக தெரிகிறது. தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையில் ஷர்மிளா சோனியாவை சந்தித்த பேசி உள்ளது தெலுங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு