துாத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 4817 இங்களில் இருந்த ஜாதிய அடையாளங்களை அழிக்கப்பட்டுள்ளது.
துாத்துக்குடி உட்கோட்டத்தில் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சமீர்வியாஸ்நகர் பகுதிகளில்
8 மின்கம்பங்களிலும் துாத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈச்சந்தாஓடை தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லம்பரும்பு ஆகிய பகுதிகளில் 22 மின்கம்பங்களிலும்.
திருச்செந்துார் உட்கோட்டத்தில் திருச்செந்துார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதிமன்விளை புதுகாலனி சண்முகபுரம் திருச்செந்துார் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துராம்மன் கோவில் தெரு ஆறுமுகநேரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ராஜமணியாபுரம் ஆத்துார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்காணி குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கூர் ஆகிய பகுதிகளில் 48 மின்கம்பங்களிலும் மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஒரே நாளில் மொத்தம் 133 இடங்களில் ஊாத்தலைவர்கள் முக்கியஸ்தர்கள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள தாமாகவே முன்வந்து வெள்ளை நிற பெயிண்டால் ஜாதிய அடையாளங்களை அழித்தனர்.
இதுவரை மொத்தம் 4817 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது இதற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் துாத்துக்குடி மாவட்ட காவல்துறை சாா்பாக தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.