தண்ணீர் லாரி மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களுக்கு குதிரைமொழி ஊராட்சி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முக்காணி ஊராட்சி மற்றும் சாத்தான்குளம் அருகே உள்ள குதிரைமொழி ஊராட்சியில் போதுமான குடிநீர் இன்றி பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமென தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, கனிமொழி மேற்கொண்ட நடவடிக்கையால், இன்று லாரி மூலமாக குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு குடிநீர் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், லாரி மூலமாக குடிநீர் பெற்ற பகுதி மக்கள் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதிக்கு நன்றி தெரிவித்தனர்.