கரூர் :
குளித்தலை அருகே உள்ள பஞ்சப்பட்டி டாஸ்மாக் அருகே சம்பவத்தன்று அதிகாலையில் கவுண்டன்பட்டியை சேர்ந்த ராஜீவ் காந்தி என்பவர் தலை மற்றும் காலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த லாலாபேட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்தனர். விசாரணையில், ரெங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த நவாஸ் மற்றும் அவரது நண்பர் பழைய ஜெயங்கொண்டத்தை சேர்ந்த கருப்புசாமி ஆகிய இருவர் சம்பந்தப்பட்டு உள்ளதாக தெரியவந்தது.
இதில் நவாஸ், கருப்பசாமி, இறந்த ராஜீவ்காந்தி அவரது மனைவி ஆகிய நான்கு பேரும் கரூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். ராஜீவ்காந்தியின் மனைவிக்கும் நவாசுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அவ்வாறு உல்லாசமாக இருந்ததை நவாஸ் படமாக எடுத்துக் கொண்டு ராஜீவ்காந்தியின் மனைவியை தனது ஆசைக்கு இணங்கி உல்லாசமாக இருக்க வேண்டுமென தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
இதை அறிந்த ராஜீவ்காந்தி தனது மனைவியிடம் வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறவே அவர் வேலையை விட்டு நின்று உள்ளார். இந்நிலையில் நவாஸ், ராஜீவ்காந்தி வேலைக்குச் சென்ற நேரத்தில் அவரது வீட்டிற்குச் சென்று அவரது மனைவியுடன் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ராஜீவ்காந்தியால் தான் தன்னுடன் உல்லாசமாக இருக்க மறுக்கிறார் என எண்ணிய நவாஸ், தனது நண்பர் கருப்பசாமி உதவியுடன் ராஜீவ்காந்தியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் 8ஆம் தேதி இரவு நவாஸ் தனது நண்பர் கருப்பசாமி உதவியுடன் ராஜீவ்காந்தியை அழைத்து மதுபானம் வாங்கி கொடுத்து கழுத்தை நெறித்து கொன்றுள்ளனர்.
பின்னர் உடலை இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து பஞ்சப்பட்டி அரசு மதுபான கடை முன்பு போட்டு விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் அவர்கள் தாங்கள் கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு