தேவகோட்டை: –
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி? என தீயணைப்பு – மீட்பு பணிகள் நிலைய அதிகாரி பள்ளி மாணவர்களுக்கு நேரடி செயல் முறை விளக்கம் அளித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். தேவகோட்டை தீயணைப்பு – மீட்பு பணிகள் நிலைய அலுவலர் ரவிமணி பேசும்போது, பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தீயை அணைக்க வேண்டும்? எப்படி பட்டாசு பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என்பது குறித்து நேரடி செயல்முறை விளக்க பயிற்சி அளித்தார். குழந்தைகள் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை பெரியவர்களின் மேற்பார்வையில் வெடிக்க வேண்டும். நிகழ்வில் தேவகோட்டை தீயணைப்பு-மீட்பு பணிகள் நிலையத்தை சார்ந்த முன்னனி தீயணைப்போர் சிவகுருநாதன் ,தீயனைப்போர் வசந்தகுமார், காளீஸ்வரன், கண்ணன், ஆனந்த், சேது ஆகியோர் பாதுகாப்பான தீபாவளி குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். நிறைவாக ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார்.
பட விளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி? என தேவகோட்டை தீயணைப்பு -மீட்பு பணிகள் நிலைய அலுவலர் ரவிமணி நேரடி செயல் முறை விளக்கம் அளித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.