சென்னை:
சிட்டிசன், அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்து வந்த நடிகர் மதுரை மோகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேல் பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தவர் மதுரை மோகன். அவரது மீசை தான் அவரது அடையாளமாகவே பல படங்களில் அவருக்கு வாய்ப்புகளை பெற்றுத்தந்தது.
வயதான கதாபாத்திரங்களில் நடித்து வந்த மதுரை மோகனின் மீசை ரொம்பவே பிடிக்கும் என நடிகர் சிம்பு சொல்லியிருக்கிறார் என மதுரை மோகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார். நடிகர் அஜித் குமார் மட்டும் தனது ரசிகர் மன்றங்களை கலைக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் அவருக்கு இருக்கும் ரசிகர் படை மிகப்பெரியளவில் இருந்திருக்கும் என்றும் சிட்டிசன் படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் நடித்த அனுபவங்களையும் ஷேர் செய்திருந்தார்.