அதிமுக பொதுச்செயலாளர், தமிழ்நாடு சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று அஇஅதிமுக தலைமைக் கழகத்தில் நாடாளுமன்ற மக்களவை பொது தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்காக அறிவிக்கப்பட்ட குழுவினர் மண்டலம் வாரியாக, நேரில் சென்று, அந்தந்த மண்டலங்களுக்கு உட்பட்ட, மாவட்ட பகுதிகளில் வசிக்கின்ற விவசாயிகள், விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர்கள், கைத்தறி சங்கங்கள், மீனவர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கங்கள், தொழில் முதலீட்டாளர்கள், சிறு, குறு தொழில் உரிமையாளர்கள், வணிக சங்கங்கள், வியாபாரிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், மாணவர்கள், பொது நலம் சார்ந்த அமைப்புகள், இளைஞர்கள், இளம் பெண்கள், விளையாட்டு வீரர்கள், ஜல்லிக்கட்டு அமைப்புகள், ஜல்லிக்கட்டு வீரர்கள், சுய உதவி குழுவினர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் தெரிவித்த கோரிக்கைகள் மற்றும் எழுத்து மூலமாக வழங்கிய மனுக்களை முழுவதுமாக ஆராய்ந்து, முழுக்க முழுக்க தமிழக மக்களின் நலன் மேம்படுத்தக்கூடிய திட்டங்களையும், அந்தந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றி தரும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ள 133 தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறேன் என அறிவித்து பத்திரிக்கையாளர்கள் முன்பு வெளியிட்டார். உடன் தலைமைக் கழக செயலாளர்கள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தார்கள்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு