அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் அகதிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் இவ்வாரு செல்பவர்கள் குடியேற்ற அதிகாரிகளின் சோதனையில் இருந்து தப்பிக்க ஆறு மற்றும் கடல் வழி பயணத்தையும் மேற்கொள்கின்றனர்.
இருப்பினும் இந்த பயணங்களின்போது சில சமயங்களில் விபத்துக்களும் ஏற்படுகின்றன. இந்த நிலையில் மெக்சிகோ வழியாக தெற்கு பசிபிக் பெருங்கடலில் அகதிகள் சிலர் படகு மூலம் சென்றனர். அப்போது திடீரென எழும்பிய ராட்சத அலையால் அந்த படகு கடலில் கவிழ்ந்தது.
இதுகுறித்து தகவலறிந்த கடலோர போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் கடலில் தத்தளித்து கொண்டிருந்தவர்களை மீட்டு மற்றொரு படகு மூலம் கரைக்கு கொண்டு சென்றனர். எனினும் இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 8 அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் சிலர் மாயமானதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.