சென்னை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி (Supplementary Randomization) மாவட்ட தேர்தல் அலுவலர், கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று ரிப்பன் கட்டட வளாக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், தேர்தல் பொது பார்வையாளர் முத்தாடா ரவிச்சந்திரா, கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ரஷ்மி சித்தார்த் ஜகடே, (சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்), ஆர். லலிதா, (கூடுதல் ஆணையாளர் (வருவாய் (ம) நிதி), டாக்டர் வி. ஜெய சந்திர பானு ரெட்டி, (கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்)), டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப., (இணை ஆணையாளர் (பணிகள்)), ஷரண்யா அறி, (துணை ஆணையாளர் (கல்வி), அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.