சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள சுசில் டூல்ஸ் அண்ட் பெய்ண்ட்ஸ்
(SUSIL TOOLS & PAINTS) உரிமையாளர் மற்றும் தொழிலார்கள் தினம்தோறும் காலை 11.30 முதல் 1.00 மணி வரை கோடை வெயில் தாக்கத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கி வருகிறார்கள். இதை சேவையாக கருதி கோடை காலத்தில் செய்து வருவது மிக சிறப்பு. சைதாப்பேட்டை பகுதியில் மார்க்கெட் மற்றும் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இருப்பதால், அதிக அளவில் கடைகள் இருப்பதாலும் பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இடமாக அமைந்து இருக்கிறது.பஜார் ரோட்டில் இவரது கடை இருப்பதால் மக்களுக்கு இவர் கோடை காலங்களில் மக்கள் அவதி படுவதற்கு முன் மக்களின் தேவைகளை அறிந்து நீர் மோர் வழங்கி வருவதால் பொது மக்கள் அனைவரும் பாராட்டி செல்கின்றனர். இவர்களை போல நல்ல உள்ளம் கொண்டவர்கள் சென்னை ல் பல இடங்களில் தொண்டு நிறுவனங்கள், அரசியல் வாதிகள் தங்களுடைய அரசியல் கட்சி சார்பாக நீர் மோர், பழ ரசம் வழங்கி வருகிறார்கள். இதை தகவல் எக்ஸ்பிரஸ் சார்பாக மனதார பாராட்டுகிறோம்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு